செல்வி தாமு தவமணி ஆசிரியை 30.06.2015 செவ்வாய்க் கிழமையுடன் ஓய்வுபெறுகின்றார்.

Tuesday, June 30, 20150 comments


25 வருடகாலமாக வரணி மத்திய கல்லூரியில் சேவையாற்றி ஓய்வு பெறும் ஆசிரியை வாழ்த்துவதற்கு வயதும் அறிவும் போதாது.

இவரிடம் உயர்தரம் தொடக்கம் இடைநிலை வகுப்பு வரை கற்ற எம்கிராம மாணவர்கள் இன்று உயர்நிலை பதவிகளில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சேவையாற்றுவது சிறப்பாகும்.

இவரிடம் கற்ற அனைத்து மாணவர்களுமே உள்நாடாக இருந்தாலென்ன வெளிநாடாக இருந்தாலென்ன இவரைக்கண்டதும் தேடிச்சென்று கதைத்துவிட்டே செல்வார்கள். இதற்கு மேல் தவமணி ஆசியரின் மதிப்பீட்டை கூறத்தேவையில்லை.


பேர்சூழல், வீட்டு வறுமையினால் பாடசாலை வரும் சில மாணவர்கள் உணவு உண்ணாமலேயே பாடசாலை வருவார்கள். ஆசியர் அவர்முகம் இனங்கண்டு மற்றவர்களுக்கு தெரியாமலே உணவு வாங்கி கொடுப்பார். சில மாணவர் கேட்டும் வாங்கி சாப்பிட்டுவார்கள். பல மாணவர்கள் அவற்றை மறக்காது இன்றும் அந்நினைவுகளை பகிர்ந்து கொள்வர்கள்.

பாடசாலை விளையாட்டுப் போட்டி தொடங்கினால் ஆசிரியரை மைதானத்தில் தான் காணலாம். அவர் பிரதிபலிக்கும் இல்லத்திற்காக சண்டை வரை செல்வார். மாணவர்களுக்காக கதைப்பதற்கு அவர் எப்போதும் பின்வாங்கியதில்லை. அம்மாத அவருடைய சம்பளமும் அவ்வில்ல செலவுக்கே செலவழிப்பார். அதிகமாக பாண்டியன் இல்லத்தில் இருந்ததாக ஞாபகம்.

ஆசிரியர் சேவைதனை கூறப்போனால் கூறிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு மாணவர்களும் ஆசிரியர் பற்றிய ஒவ்வொரு நினைவை நிச்சயமாக வைத்திருப்பார்கள். அவ்வாறு இன்றேல் அவரிடம் கற்றிருக்காத மாணவராகவே இருப்பார் என்பது திண்ணம்!

கல்விச்சேவைக்காக தன்னையே அர்பணித்த ஆசிரியர் நீண்ட ஆயுளும், குறைவில்லாத செல்வமும், நோய் நொடியற்ற வாழ்க்கையும் அமைய சுட்டிபுர கண்ணகித்தாயின் அருளை படித்த அனைத்து மாணவர்களும் வேண்டுவோமாக!!!
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. . - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972