தற்காலத்தில் நவீனவசதிகள் நமக்கு கிடைக்கப்பெற்றாலும் அவைகள் இல்லாத இயற்கைக் காலம் மறக்க முடியாத அனுபவங்களை நம்மிடையே இன்றும் மீட்டிக்கொண்டிருக்கும்...
குப்பி விளக்கிலும் அரிக்கன் லாம்பிலும் கற்ற கல்வியும் காலில் எதுவுமற்று வெறுங்காலுடன் ஊமல் ஒன்றை தட்டியவாறு றோட்டுக்கரை நாவல் பழமும், காரைப் பழமும், ஈச்சம்பழமும் பறித்து உண்டவாறு இரசித்தபடியே நடைபயின்று பள்ளி சென்றுவந்த காலம் என்றும் பசுமையானவை. இவை என்றும் நினைவைவிட்டகலா நினைவுகளே. எத்தனை நவீனங்கள் நம்மை சூழ்ந்து கொண்டாலும் அக்காலத்தில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியும் சந்தோசமும் என்றும் இனி நமக்குக் கிடைக்கப்போவதில்லை!
..........................................
நாம் இந்நிலையில் இருப்பதற்கு காரணமான கல்வித்தாயவளின் இருப்பிடத்தில் கல்வி கற்ற பழையமாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சங்கமமாகும் வகையில் வரணி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் சங்கம விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தொழில் நிமித்தமும் வேறு தேவைகளுக்காகவும் வேறிடங்களில் அல்லது வேற்று நாடுகளில் உள்ள எமது பழைய மாணவர்களை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
பாடசாலைக்கு அபிவிருத்தி என கேட்கும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் அள்ளி மனமுவந்து வாரிவழங்கும் எமது பழைய மாணவர்களே! உங்களை அன்போடு பழையமாணவர் சங்கம விழாவிற்கு இருகரம் கொடுத்து அழைக்கின்றோம் வாரீர்.....
பலகாலம் காணாத நண்பர்கள் உங்களை காண காத்திருக்கின்றனர். பலகதைகள் சொல்வதற்காய் பாடசாலை ஒவ்வொரு இடங்களும் உங்களுக்காய் காத்திருக்கிறது. உங்கள் வருகை நல்வரவாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.உங்கள் வருகையே எமது நோக்கத்தின் வெற்றி......
எத்துறையிலும் நம்பாடசாலையின் வேரினைப் பரப்பி நம்கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் பழையமாணவர்களே நமக்கு கல்வி புகட்டிய கல்வித்தாய் அழைக்கின்றாள்...
காலம் :
2015.12.26 (சனிக்கிழமை)
நேரம் : பி.ப 1 மணி
இடம் : வரணி மத்திய கல்லூரி பிரதான மண்டம்.
........................................
உங்களது ஆலோசனைகளையும் வழங்கலாம்...
இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Post a Comment