வரணி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்க்கான சங்கமவிழா கல்லூரியின் பொது மண்டபத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் கல்லூரி முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவின் போது கல்லூரி பழைய மாணவர்காளால் விருந்தினர்கள்
வரவேற்க்கப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. மேலும் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வின் விசேட அதிதிகளாக திரு.வே.பாலசுப்பிரமணியம் (ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர்), திரு.வீ.கந்தசாமி (ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர்), திரு. சு .கணபதிப்பிள்ளை (ஓய்வு நிலை மாவட்ட இளைஞர் சேவை மன்ற அதிகாரி), திரு.வ. நடராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்-சாவகச்சேரி), கலாநிதி . செ.சந்திரசேகரம் (சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்),
திரு .சி .உதயகுமார் (பொருளியல் துறை தலைவர் - சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), திருமதி.மீரா வடிவேற்கரசன் (பதிவாளர் வடமாகாண மேல் நீதிமன்றம்), திருமதி. நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர் - சமூக சேவைகள் திணைக்களம், யாழ்ப்பாணம்), திரு.த.சிவசெந்தில்நாதன் (வலயக் கணக்காளர் - மேல் நீதிமன்றம், திருகோணமலை), திரு.மு.ஆனந்தராசா (விரிவுரையாளர் - கல்வியற்கல்லூரி, யாழ்ப்பாணம்), திரு.து.இளங்குமரன் - கல்வியற்கல்லூரி, யாழ்ப்பாணம்), திரு கா.கமலநாதன் (விரிவுரையாளர் - கல்வியற்கல்லூரி), திருமதி. சுதர்சினி சதீஸ்கண்ணா ( கணக்காளர் -வலயக்கல்வி அலுவலகம், கிளிநொச்சி), திரு .க. கனகதுரை (செயலாளர் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை, கரவெட்டி), திருமதி.தர்சினி தயானந்தன் (செயலாளர் - சாவகச்சேரி பிரதேசசபை, கொடிகாமம்) போன்றோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன் போது நிகழ்வின் விசேட அதிதிகளாக திரு.வே.பாலசுப்பிரமணியம் (ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர்), திரு.வீ.கந்தசாமி (ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர்), திரு. சு .கணபதிப்பிள்ளை (ஓய்வு நிலை மாவட்ட இளைஞர் சேவை மன்ற அதிகாரி), திரு.வ. நடராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்-சாவகச்சேரி), கலாநிதி . செ.சந்திரசேகரம் (சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்),
இவ் விழாவினை நிகழ்ச்சிக் குழுத்தலைவர் திரு.சி.சிவச்சந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். மேலும் கல்லூரி தாய்க்கு கடந்த ஆண்டில் பெருமை சேர்த்த கா.பொ.த உயர்த மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது. இதனைதொடர்ந்து கடந்த ஆண்டில் ஓய்வு பெற்ற ஓய்வு நிலை ஆசிரியர்களை கொளரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது. மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட விசேட அதிதிகளுக்கு சங்க விழா நினைவுச்சின்னங்களும் பழைய மாணவர்களினால் வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்வில் புதிய சங்க உறுப்பினர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் அன்பளிப்புச்சீட்டுக்கள் என்பன வழங்கப்பட்டது . www.varanyccoba.com )உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய இசைக்கச்சேரியும் இடம்பெற்றது. இறுதியாக இசை நாடகம் சத்தியவான் சாவித்திரி நாடகம் AVM அவர்களால் வழங்கப்பட்டது. இவ்வாறு இவ் நிகழ்வு மாலை 7 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.
























Post a Comment