பழைய மாணவர்களுக்கோர் அன்பான அறிவித்தல்...

Wednesday, December 30, 20150 comments


சங்கம விழா இனிதாக வெற்றியாக நடாத்தி முடித்துள்ளோம் என்பது மகிழ்ச்சியே. எமது விழா தொடங்கப்பட்டதன் நோக்கத்தினை அல்லது இலக்கினை நாம் இன்னும் அடையவில்லை என்பதே உண்மையாகும். சங்கம விழா என்ற கருவை மூன்று நோக்கங்களாக வகைப்படுத்தி கூறமுடியும்.

  1. பழைய மாணவரிடையே வலையமைப்பை ஏற்படுத்துதல்.
  2. பழைய மாணவ சங்கத்திற்கென நிலையான கணிசமான பணத்தினை வைப்புச்செய்தல்.
  3. வெளிப்படை தன்மையை பேணுதல்

அவ்வாறாயின் இனிநாம் செய்ய

வேண்டியவை எவை???....

சங்கம விழாவுக்கு பழைய மாணவர்கள் அலையென திரண்டுவந்த போது எம்மால் முறையான வகையில் அங்கத்துவ விண்ணப்பப் படிவத்தையோ அல்லது சந்தா பணத்தினையோ முறையாக பெறமுடியாது இருந்து. பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் எமது அழைப்பையேற்று வருகைதந்த உங்களை வரவேற்று உபசரிப்பதற்கே எமது ஆளணியினரின் நேரம் போதுமாக இருந்தது. தயவுடன் அன்று சமூகம் தந்தோரும் சமூகம் தராத படசாலைமீது அக்கறையுடைய பழைய மாணவர்களையும் எம்முடன் இணையுமாறு அழைப்புவிடுக்கின்றோம். 

இவையாவற்றையும் சங்கம விழா என்பது இணைக்கும் தொடக்க புள்ளியே தவிர எமது கருதுகோளினை நாம் என்னும் அடையவில்லை.


இவை பூரணமாக நடைபெற்றாலே எமது விழாவினது பிரதான நோக்கம் நிறைவேறும். விழாவிற்கு வருகை தந்தோரை நாம் இனங்கான முடியுமான தரவுகள் எம்மிடம் இருப்பதால் நாமாகவே முடியுமானவரை உங்களுடன் தொடர்பு கொள்ள காத்திருக்கிறோம். அழைப்புகளை உதாசீனம் செய்யாது எமது பொது பணிக்கு ஆதரவு தருமாறு உங்களை வேண்டுகின்றோம்.

வருட சந்தா : ரூபாய் 30. ஆயுள் சந்தா : ரூபாய் 150 ஆகும்.

மேலே உள்ளவற்றை திறம்பட செய்வோமாயின் வெளிப்படைத்தன்மையுடன் எமது இணையத்தளத்தில் பழைய மாணவ சங்க நிர்வாக சபையின் அனுமதியுடன் தணிக்கைக்கு அப்பாற்பட்ட விடயங்களை வெளியிட முடியும் என நம்புகின்றோம். பழைய மாணவனாக எமது சங்கத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வினை வெளிப்படை தன்மையுடன் வெளிக்கொணர்வதே எமது வெளிப்படைத்தன்மை என்பதன் விளக்கமாகும்...

அத்துடன் விழாவுக்காக அன்பளிப்பாக விநியோகம் செய்த ஆயிரம் ரூபா பெறுமதியிடப்பட்ட பற்றுச்சீட்டு புத்தகங்களை இதுவரை பொருளாளரிடம் ஒப்படைக்காதவர்கள் கணக்கு விபரங்களுடன் ஒப்படைத்தல். இவை கணக்கு விபரங்களை பூரணப்படுத்துவதற்கு பொருளாளருக்கு உதவியாக இருக்கும்.
ஆகவே பழைய மாணவர்களே எம்முடன் இணைந்து பாடசாலை அபிவிருத்திக்கு ஒத்துழைப்புத்தர வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. . - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972