அனைவரது கவனத்திற்கு...

Saturday, March 19, 20160 comments

கல்லூரிக்கான தேவைகள் ஏற்படுகின்றபோது அவை தொடர்பான வேண்டுகோள்களை முன்வைப்பதற்கு பழையமாணவர் சங்கம் என்றும் தயாராகவே உள்ளது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கின்றோம். அவ்வாறே யாராவது கல்லூரிக்கு உதவியளிப்பதற்கு விரும்பினால் அற்றையும் செயற்படுத்த காத்திருக்கின்றோம்.

சிலர் தமது வியாபாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கல்லூரிக்கு அவசர தேவைகளாக சிலவற்றை வேண்டுமென கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அதனை அவதானிக்கும் நீங்களும் கொடை வழங்குவதற்கு பின்னிற்பதுமில்லை.

நீங்கள் வழங்கும் பணம் உரிய முறையில்; உரிய பெறுமதிக்கு அவை பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை அவதானிக்கும் கடமை எமக்குள்ளது. ஓரிருவரின் தவறாக பணக் கையாடல்கள் கல்லூரிக்கு கொடை வழங்க விருப்பமுடையவர்களுக்கும் தவறான செய்திகளை வழங்குவதற்கு எமது சங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காது என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீங்கள் எமது சங்கத்தின் ஊடாகத்தான் உதவிகள் செய்ய வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. நீங்கள் தனிப்பட்ட ரீதியாக உதவிகள் புரிவதாயின் நீங்களோ அல்லது உங்கள் உறவினர்கள் ஊடாகவோ அவற்றை நேரடியாக கல்லூரிக்கு வழங்குவதையே நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் போது எமக்கும் அறிவியுங்கள். நாமும் பங்குபெற காத்திருக்கின்றோம்.

அவ்வாறில்லாது நீங்கள் உதவி செய்வீர்களாயின் பணமுறை கேடுகளை ஊக்கிவிப்பதோடு இவற்றால் ஏனையோர் உதவிகள் புரியாது விடுவதற்கும் காரணமாவீர்கள். முக்கியமாக பழைய மாணவர் சங்கத்தினை பவீனப்படுத்துகின்றீர்கள் என்பதையும் மறக்காதீருப்பீர்களாயின் நன்று.

கல்லூரி தேவைகள் மற்றும் உரிமைகள் தொடர்பாக கதைப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கு எமது சங்கம் பலமாக இருத்தல் அவசியமாகும்.

எனியும் எமது பலத்தினை இழக்கச் செய்யும் செயற்பாடுகளில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என நம்புகின்றோம்.

முதலிலும் இவ்வாறான வேண்டுகோளினை முன்வைத்தோம். ஆயினும் அவை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

எனிவரும் காலத்தில் பழைய மாணவர் சங்கத்தின் பலத்தினை இல்லாது செய்வோர் தொடர்பாகவும் உள்ளூர் வியாபாரிகள் தொடர்பாகவும் தகவல்களை வெளிப்படையாக வெளிக்கொணர தயங்கமாட்டோம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.

நன்றி.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. . - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972