இன்று காலை 8 மணியளவில்
வரணி மத்திய கல்லூயின் பொது மண்டபத்தில் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.சி.சுந்தரமூர்த்தி
ஆசிரியர் அவர்களால் கல்லூரி முதல்வர் மற்றும்
விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியரிடம் ஒரு தொகுதி மணவர்களுக்கான விளையாட்டு சீருடைகள் கையளிக்கப்பட்டன.
மேலும் இச்சீருடைகளுக்கான
பங்களிப்பினை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வாழ் பழைய மாணவர்கள் அதே நாட்டில் வாழுகின்ற
திரு.ச.தர்சன் (வரணி இயற்றாலை) ஊடாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வின்
போது முதல்வர் அவர்கள் பழையமாணவர் சங்கம் பல வழிகளில் பல உதவிகளை எமது கல்லூரிக்கு ஆற்றிவருகின்றமை வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பாக பெரு வேலைத்திட்டமாக
சுமார் 1500 அடி மதிலை அமைப்பதோடு நின்றுவிடாமல் கல்லூரி கோருகின்ற எவ்வகை உதவியாயினும்
அதனை செய்து தருவதற்கு முன்வருவது என்றென்றும் பாராட்டுதலுக்கு உரியது எனவும் குறிப்பிட்டார். அந்தவகையில்
இன்றைய உதவியும் அத்தகையதே எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ் கல்லூரியில்
படித்து வெளிநாட்டில் வாழும் பழைய மாணவர்கள், சங்கம் விடுகின்ற கோரிக்கைகளினை ஏற்று
கல்லூரித்தாய்க்காக உதவி வருகின்றார்கள். இது எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும்
உதவியாக இருக்கின்றது. இவ்வாறு தொடர்ந்தும் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் இவ் நிகழ்வில்
சங்க செயலாளர் அவர்கள் குறிப்பிடுகையில் இந்த
சீருடைக்கான பங்களிப்பினை வழங்கிய உள்ளங்களுக்கு
எமது சங்கத்தின் சார்பில் இனிய நன்றியறிதலை
தெரிவித்துகொள்கின்றோம். எமது சங்கமானது இக்கல்லூரி தாயிடம் மிகுந்த பற்றுக்கொண்டுள்ளமையினால்
நீ்ண்ட தூர சுற்றுமதிலை அமைத்ததோடு நின்றுவிடாமல் கல்லூரி எதிர்பார்க்கின்ற உதவிகளை
அவ் அப்போது செய்து வருகின்றது. அண்மையில் எமது கல்லூரியில் படித்து வெளியேறி பல நிலைகளில்
இருக்கின்ற பழைய மாணவர்களை ஒன்றிணைத்து கல்லூரியின் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக
பழைய மாணவர் சங்கம விழா ஒன்றினை நாம் நடாத்தியிருந்தோம். இங்கே கூடிய பழைய மாணவர்கள்
பல அன்பளிப்புளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் என்றென்றும் பாடசாலையின் வளர்ச்சியில்
தாமும் பங்கெடுப்போம் என்று கூறியிருந்தனர். இச் சங்கம விழா சங்கத்தின் வளர்ச்சிக்கும்
கல்லூரியின் வளர்ச்சிக்கும் பெரு உதவியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். அவர்
மேலும் தெரிவிக்கையில் எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு மேலும் பல தேவைகள் நிறைவு செய்யப்பட
வேண்டியுள்ளது இதற்கு பங்களிப்பினை ஆற்றவிருக்கும் பழைய மாணவர்கள் எமது சங்கத்தின்
ஊடாக உதவிகளினை மேற்கொள்ளுகின்ற போது அது ஒரு காத்திரமான உதவியாக அமையும் என கருதுகின்றேன்
என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு இன்றைய
மாணவர்களுக்கான விளையாட்டு சீருடைகள் கையளிப்பு
நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.






Post a Comment