கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாக நிதியுதவியோ அல்லது பொருள் உதவியோ செய்யவிரும்பின் பழைய மாணவர் சங்கத்திடமோ அல்லது கல்லூரி அபிவிருத்தி சங்கத்திடமோ அல்லது கல்லூரியின் அனைத்து அமைப்புகளின் தலைவரான கல்லூரி முதல்வரிடமோ தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அதைவிடுத்து தனிப்பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நிதியுதவிகளையோ அல்லது ஏதாவது பொருளுதவிகளையோ செய்யவேண்டாம் என்பதை தங்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.
கல்வி அமைச்சினது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதே கல்லூரி என்பதை நாம் மறக்கலாகாது. அத்தோடு நீங்கள் எமது கல்லூரிக்காக உதவும் எவையும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அனுமதிக்க முடியாது.
அண்மைய நாட்களில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றமையே தங்களிடம் அவசரமாக இவ்வேண்டுகோளினை முன்வைக்க காரணமாகும்.
கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி கல்லூரி மாணவர்களுக்குத் தேவைகள் இருப்பதாக தனிப்பட்ட நபரின் முகநூலில் தனிப்பட்ட அந்த நபரின் தொலைபேசி இலக்கத்ததுடன் கல்லூரியின் முகப்பு படத்துடன் கல்லூரியின் சின்னமும் பயன்படுத்தப்பட்டு நிதியுதவி கோரப்பட்டிருந்தது. அரச இலச்சனைகளை தனிப்பட்டவர் பாவிக்கமுடியாது என்ற அடிப்படையை அறியாதவர்கள் பழையமாணவர் சங்கத்திடம் எந்த உதவிகோரலும் விடுக்கப்படாது தனிப்பட்டதாக கோரியதோடு அதை சரியெனவும் வாதிட்டமையை அவதானிக்க முடிந்தது.
அரச சுற்றுநிரூபங்கள் தெரிந்தவர்களுக்கு விளக்கம் கொடுக்காத பழைய மாணவர்சங்கம் தனது நிர்வாகசபைக்கூட்டத்தில் கல்லூரி முதல்வரிடம் கண்டனத்தை வெளியிட்டதோடு அவ்வாறு எனிவரும் காலத்தில் அவ்வாறு நடைபெறமாட்டாது என்ற உத்தரவாதத்தினையும் பெற்றுக்கொண்டது.
கல்லூரி மீது அக்கறையுடைய பழைய மாணவர்களே! நீங்கள் அளிக்கின்ற பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எமது பழையமாணவர்சங்கம்
ஒருபோதும் அனுமதியாளிக்காது என்பதோடு உங்களது உதவிகளுக்கு சரியான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது, பபடுகின்றது என்பதை ஒவ்வொரு விடயங்களிலும் பழைய மாணவர்சங்கம் உறுதிசெய்து கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கல்லூரியில் ஏதாவது தேவை காணப்படின் நாம் உங்களிடம் தொடர்பு கொள்ளுவோம். அதைவிடுத்து யாராவது உங்களிடம் தொடர்பு கொண்டால் எமக்கு தயவுசெய்து அறிவிக்கவும்.
எனவே கல்லூரி தாய்க்கு உதவ விரும்புவோர் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தனிப்பட்ட ரீதியாக கல்லூரிக்காக யாராவது உதவி கோரப்படுமாயின் அவை தொடர்பில் உரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழைய மாணவர்சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு கல்லூரி இலச்சினையோ அல்லது அரச இலச்சினையோ யாராவது தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

+ comments + 1 comments
போன பத்தாம் மாத கடைசியில் நான் பாடசாலையின் சங்கீத துறையை முன்னேற்றுவதை பற்றி கலந்து ஆலோசித்திருந்தேன் ஆனால் ஐந்து மாதத்திற்கு மேலாக ஒரு விபரங்களும் வரவில்லை?
Post a Comment